ETV Bharat / city

மதுரை மக்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்! - அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி! - முதலமைச்சர் நாளை மறுநாள் மதுரை வருகை

மதுரை: நீண்ட நாள் குடிநீர் சிக்கலைத் தீர்க்கும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட நாளை மறுநாள் முதலமைச்சர் மதுரை வரவுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

raju
raju
author img

By

Published : Dec 2, 2020, 4:36 PM IST

மதுரையில் நாளை மறுநாள் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வைகை குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1904 இல் ஆரப்பாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது 1,295 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாக மதுரைக்கு குடிநீர் நிரந்தரமாக கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மதுரை வருகிறார். மேலும் 60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும், ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாக கட்டடத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

மதுரை மக்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்! - அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

152 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. அடுத்த 30 மாதத்தில் இந்த திட்டம் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டம் முடிவடைந்த பிறகு மதுரையில் தண்ணீர் சிக்கலே ஏற்படாது. இந்நிகழ்ச்சிக்காக வீட்டுக்கு வீடு சென்று அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களை அழைக்க உள்ளோம் “ என்றார்.

இதையும் படிங்க: 17 பேரை பலி கொண்ட சுவர்: முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.