குரூப் 4 தேர்வு முறைகோடு தொடர்பான வழக்கில் சிபிஐ-க்கு நோட்டீஸ் - குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்
மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் கோரிய வழக்கில் சிபிஐ-க்கு நோட்டீஸ் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் சிபிசிஐடி விசாரித்தால், வழக்கின் உண்மை நிலை தெரியவராது.
மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி,ரவீந்திரன் அமர்வு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ-க்கு நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டனர்.
Body:குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கில் சிபிஐ க்கு நோட்டிஸ்.
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு.
வழக்கறிஞர் நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனு தாக்கல் செய்தனர்,
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் சிபிசிஐடி விசாரித்தால், வழக்கின் உண்மை நிலை தெரியவராது. பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், தேசிய நெடுஞ்சாலையிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனு
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி,ரவீந்திரன் அமர்வு விசாரணையில் உத்தரவு.Conclusion: