ETV Bharat / city

5ஆம் உலகத்தமிழ் மாநாடு! - மதுரையின் கம்பீரமான நாற்பதாண்டு வரலாற்றுத் தடம்! - தமிழறிஞர்கள்

மதுரையில் கடந்த 1981ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்ட சிலைகளும், வளைவுகளும், இன்றும் கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன. வரும் 10 ஆம் தேதியுடன் 40 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் அதன் அக்கால நினைவுகளை சுமந்து வருகிறது இச்சிறப்புத் தொகுப்பு.

vis
vis
author img

By

Published : Jan 6, 2021, 4:45 PM IST

Updated : Jan 6, 2021, 6:39 PM IST

உலகத்தமிழர் ஒன்றிணையவும், மொழியை காக்கும் பொருட்டும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், இரண்டாவது மாநாடு பேரறிஞர் அண்ணாவால், 1968 ஆம் ஆண்டு சென்னையிலும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1970 ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடும், 1974 ஆம் ஆண்டு நான்காவது மாநாடு இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில், அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆரால், 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4 தொடங்கி 10 ஆம் நாள் வரை நடத்தப்பட்டது. இதனையொட்டி 7 நாட்களும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழ் சான்றோர், அறிஞர் பெருமக்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பெரு நிகழ்வாக அது அமைந்தது.

அச்சமயத்தில், மாநாட்டு நினைவாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக, இன்றைய காளவாசல் சந்திப்பில் திரு.வி.க., ஃபாத்திமா கல்லூரி சந்திப்பில் வீரமாமுனிவர், இராபர்ட் டி நொபிலி, கே.கே.நகர் சந்திப்பில் தொல்காப்பியர், ராஜா முத்தையா மன்றம் சந்திப்பில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தல்லாக்குளம் பெருமாள் கோவில் திடலில் தமிழ்த்தாத்தா உ.வே.சா., கவிமணி தேசிக விநாயகம், அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் திருவள்ளுவர், மேலமடை சந்திப்பில் தனிநாயகம் அடிகள், தெப்பக்குளம் சந்திப்பில் ஆறுமுக நாவலர், பழங்காநத்தம் சந்திப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன.

மேலும், மதுரை மாநகரின் திசைக்கொன்றாக நான்கு தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு, மேற்கே விராட்டிபத்தில் அங்கயற்கண்ணி தோரண வாயிலும், வடக்கே மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயிலும், கிழக்கே ஐராவதநல்லூரில் சோழன் தோரண வாயிலும், தெற்கே பசுமலையில் சேரன் தோரண வாயிலும் எழுப்பப்பட்டன. மதுரை தமுக்கத்தில் அமைக்கப்பட்ட வளைவுக்கு மூவேந்தர் நுழைவாயில் எனப் பெயரிட்டு, அதனை எம்ஜிஆரே திறந்து வைத்தார். தமுக்கம் வாயிலில் அமைக்கப்பட்ட கருங்கல்லாலான தேரில் தமிழன்னை சிலை நிறுவப்பட்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் திறக்கப்பட்டது.

மதுரையின் நாற்பதாண்டு நினைவுகளை சுமந்து நிற்கும் இவைகளைப்பற்றி, அம்மாநாட்டில் கலந்து கொண்ட 93 வயது நிரம்பிய தமிழறிஞர் இளங்குமரனார், நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ”மாநாட்டில் சங்கச் சான்றோர் சால்புகள் என்ற தலைப்பில் என்னோடு சேர்த்து 13 பேர் பேசினோம். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய நாவலர் நெடுஞ்செழியன், தனது தலைமை உரைக்குப் பிறகு, பேச வருவோர் தலா 3 நிமிடங்கள் மட்டுமே பேசக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், அப்படிச்சொன்ன நாவலரோ முக்கால் மணி நேரம் பேசியிருந்தார்.

5ஆம் உலகத்தமிழ் மாநாடு - மதுரையின் கம்பீரமான நாற்பதாண்டு வரலாற்றுத் தடம்!

என்னுடைய முறை வந்தது. 'பெருமக்களே அனைவரையும் வணங்குகின்றேன்...எனக்கு 3 அல்ல ஒரு மணித்துளியே போதும். மேடையிலே இருக்கும் சொற்களைப் பாருங்கள். யாதும் ஊரே... யாவரும் கேளிர்... என்று எழுதியுள்ளது. மாநாடு முடிந்து ஊருக்கு நீங்கள் திரும்பும்போது, யாது உம் ஊர்... என்று கேட்டால், யாதும் ஊர்... என்று சொல்லுங்கள்... யாவர் உம் கேளிர் என்று கேட்டால்... யாவரும் கேளிர்... என்று சொல்லுங்கள். வினாவும் இது விடையும் இது' ” என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ”மாநாட்டையொட்டிய கருத்தரங்கில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், குமரிக் கண்டம் குறித்து பேருரை நிகழ்த்தினார். ஒரு கட்டத்திற்குப் பிறகு நெஞ்சுவலியால் அவர் மிகவும் சிரமப்பட்டபோது எம்ஜிஆர், பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டும், பாவாணர் தொடர்ந்து பேசியதில் மயக்கமுற்று நிலைகுலைந்தார்” என்று அந்நாளைய நிகழ்வைக் குறிப்பிட்டு கதறி அழுதார் தமிழறிஞர் இளங்குமரனார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு பல்வேறு பெருமைகள் இருந்தாலும், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் அமையவும், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் அமையவும் முதலமைச்சர் எம்ஜிஆரால் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.

தமிழுணர்வுடன் நடைபெற்ற அந்த மாநாட்டின் போது அமைக்கப்பட்ட தமிழறிஞர்கள் சிலைகள், தற்போது கவனிப்பாரின்றி கிடப்பது வேதனையளிப்பதாக, அப்போது அம்மாநாட்டில் பள்ளி மாணவனாக கலந்து கொண்ட, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் துணை முதல்வரும், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் கரு.முருகேசனார் கூறுகிறார்.

மதுரையின் எப்பக்கம் சென்றாலும், ஏதேனும் ஒரு வகையில் 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவுத் தடங்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்நினைவுகளைப் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எம்ஜிஆர் நிறுவிய கட்சியே தற்போது ஆட்சியிலிருந்தும், அதனை செய்யத் தவறுவது வரலாற்றுப் பிழை என தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இச்செய்தி ஆள்வோர் செவி சேரட்டும்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jan 6, 2021, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.