புதுக்கோட்டை மாவட்டம் அமமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் பிரபாகரன் தாக்கல்செய்த முன்பிணை மனுவில், "கடந்த 12ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரைப் பற்றி அவதூறாகப் பேசி அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறி புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முழுமையாக ஆளும் கட்சியின் தூண்டுதலின் பெயரில் பதியப்பட்ட வழக்கு. எனவே என்மீது பதியப்பட்டுள்ள வழக்கில் முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞர் முன்னிலையாக அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை அமமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் பிரபாகரனை செப்டம்பர் 30 வரை கைதுசெய்ய இடைக்காலத் தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.