ETV Bharat / city

கொரோனா தொற்றை தடுக்க தென்னக ரயில்வே முன்னெச்சரிக்கை

author img

By

Published : Mar 11, 2020, 2:19 PM IST

மதுரை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகத் தென்னக ரயில்வே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் கோட்ட மேலாளர் வி.ஆர். லெனின் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில்வேயின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

மதுரை ரயில்வே கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகத் தென்னக ரயில்வே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர். லெனின், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.ஜே. பாஸ்கர் ஆகியோரின் மேற்பார்வையில் வைரஸ் தொற்றால் பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் சிகிச்சைக்காக ஆங்காங்கு மருத்துவப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்த கோட்ட மேலாளர், "அரசரடி இருப்புப்பாதை பணியாளர் பயிற்சி மையம், திருப்பரங்குன்றம் இயந்திரவியல் தொழிலாளர் பயிற்சி மையம், திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஓய்வு அறைகள், விருதுநகர் போக்குவரத்துத் தொழிலாளர் பயிற்சி மையம், மதுரை ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றில் இந்தச் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரயில் நிலையங்களில் தொடர்ந்து விழிப்புணர்வுத் தகவல்கள் ஒலிபரப்பப்பட்டுவருகின்றன. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

மேலும், "ரயில்வே மருத்துவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர்களுடன் தொடர்பிலிருந்து முக்கிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையங்கள், ரயில்களைச் சுத்தப்படுத்தும் பணியின் கால இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாக ரயில் பெட்டிகளின் வாயில்களில் உள்ள கைப்பிடிகள் ரயில்வே ஓய்வு அறையில் உள்ள கதவு கைப்பிடிகள் ஆகியவை தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க; 'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.