ETV Bharat / city

வெரிகோஸ் நோய் பாதிப்பு: பணியிடம் மாற்ற கோரும் நடத்துநர்

மதுரையில் வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் பேருந்து நடத்துநர் பணியிடமாற்றம் செய்து தரக் கோரி போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடந்துநர்
வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடந்துநர்
author img

By

Published : Sep 8, 2021, 6:23 AM IST

மதுரை: சோழவந்தான் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (44). இவர், மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், 2006ஆம் ஆண்டு அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியில் சேர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குமாரம் அருகே ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பலத்த காயமடைந்தார்.

இதனால், சிகிச்சைக்காக தன்னுடைய சேமிப்பு பணம், மனைவி குழந்தைகளின் நகைகளை விற்று 35 லட்சம் ரூபாய் செலவு செய்து உடல்நலம் பெற்றார். இருந்தாலும், தனது இரு கால்களிலும் ஏற்பட்டுள்ள வெரிகோஸ் எனும் நரம்பு சுருட்டு நோயால் தற்போது வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்.

வெரிகோஸால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்

இதனால், தனக்கு மாற்றுப்பணி தரக்கோரி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், செல்வகுமாரை தொடர்ந்து நடத்துநராகவே பணிபுரிய வேண்டும் எனவும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கம் செய்துவிடுவோம் எனவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது.

தொடர்ந்து தனது கால்களால் நிற்க முடியாது என கூறிய நிலையில் தற்காலிகமாக அண்ணா பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் போதிய இட வசதி இல்லாத நிலையிலும் வெரிகோஸ் பாதிக்கப்பட்ட தனது கால்களுடன் நடக்க முடியாமல் கடுமையான வலியை பொறுத்துக் கொண்டு தட்டுதடுமாறி பயணிகள் அமரும் இடத்தில் காலை நீட்டியபடி அமர்ந்து பணிபுரிகிறார்.

போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள்

கால்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வலிகளுக்கு இடையிலும் பயணிகள், போக்குவரத்து பணியாளர்களிடத்தில் கண்ணியத்துடன் நடந்துகொள்கிறார். இவர் கணிணி பட்டயபடிப்பு படித்துள்ளதால் போக்குவரத்து அலுவலகத்திலயே பணி கிடைத்தால் தன்னால் வேதனையின்றி பணிபுரி முடியும் என போக்குவரத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடந்துநர்
வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடந்துநர்

வெரிகோஸ் நோய் பாதிக்கப்பட்ட நிலையிலும் பயணிகளுக்கு சேவையாற்றி வரும் நடத்துநர் செல்வக்குமாரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டிவரும் நிலையில் அவருக்கு மாற்றுபணி வழங்க போக்குவரத்து துறை அலுவலர்கள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பேருந்தில் பர்ஸை தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.