ETV Bharat / city

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரிய வழக்கு முடித்துவைப்பு!

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரிய வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்
author img

By

Published : Sep 30, 2021, 7:21 AM IST

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016 அக்டோபர் 24 முதல் காலியாக உள்ளன. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டிசம்பர் 9ல் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றம் நகராட்சி, மாநராட்சிகளுக்கான தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம் வழங்கியிருப்பதாக் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் வெளியிடத் தடை கோரிய வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.