ETV Bharat / city

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்தாகலாம் - ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நிதி தொடர்பாக, ஜப்பானின் ஜைகா நிறுவனத்துடன் வருகிற மார்ச் மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம்
author img

By

Published : Jan 1, 2021, 6:19 PM IST

மதுரை: 2019 ஜனவரி மாதம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையான ஜைகா நிறுவனம் கடனாக வழங்குவதாக கூறப்பட்டிருந்தது.

அடிக்கல் நாட்டு விழாவின் போது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மருத்துவமனைக்கான பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை, ஜைகாவிடமிருந்து நிதி கிடைக்காத நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சுற்றுச்சுவர் அமைக்கும் மற்றும் மண்பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்டுள்ளார்.

அவருக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஜைகா அலுவலர்களுடன் ஆலேசானை நடத்தியுள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் ஜைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், எய்ம்ஸ் அமைப்பதற்கான மொத்த செலவில் 85 விழுக்காடு நிதியான சுமார் 2 ஆயிரம் கோடியை ஜைகா நிறுவனம் வழங்கும் எனவும் பதிலளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்த கேள்விக்கு, ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை குறித்து தெரியவரும் எனவும், தற்காலிக கட்டடங்கள் இதுவரை அடையாளம் காணப்படாததால், கட்டடங்கள் தயாரானதும் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறித்து தெரியவரும் எனவும் பதிலளித்துள்ளது.

இந்த தகவல், 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் பணி நிறைவடையும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பது தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது குறித்து மத்திய அரசு விரைவாக செயல்பட வேண்டும் எனவும், வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முதல் முறையாக மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி - தென்னக ரயில்வே சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.