ETV Bharat / city

விபத்தைத் தவிர்க்க ஓரமாக ஒதுங்கிய டெம்போ கவிழ்ந்து விபத்து! - tempo traveller accident in erode sathyamangalam

கார் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையில் ஓரமாக ஒதுங்கிய டெம்போ, கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தை தவிர்க்க ஓராமாக ஒதுங்கிய டெம்போ கவிழ்ந்து விபத்து!

author img

By

Published : Oct 3, 2021, 11:04 PM IST

Updated : Oct 4, 2021, 8:50 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த நால்ரோட்டில் வாழைக்காய் பாரம் ஏற்றிய டெம்போ, அத்தாணி சாலை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

டெம்போவில் ஓட்டுநர், வாழைக்காய் வெட்டும் தொழிலாளர்கள் என 4 பேர் இருந்தனர். அத்தாணி சாலை அரிசி ஆலை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென சாலையின் நடுவே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க, வாழைக்காய் ஏற்றிவந்த டெம்போ ஓட்டுநர் சற்று ஓரமாக திருப்பியதால் டெம்போ கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் சிசிடிவி காட்சிகள்

வாழைகள் வீண்

இதில், டெம்போ ஓட்டுநர், வாழைக்காய் தொழிலாளர்கள் ஆகியோர் காயமடைந்தனர். அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டெம்போ கவிழ்ந்த விபத்தில் அதில் இருந்த வாழைகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமைடந்ததாக சத்தியமங்கலம் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பழச்சாறு என நினைத்து மது அருந்திய சிறுவன்... குற்ற உணர்ச்சியில் மயங்கிய தாத்தா... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!

Last Updated : Oct 4, 2021, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.