2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம் குறித்து ஒரு பரிந்துரையை முன்மொழிந்தார். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகநாடுகள் பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்றன. இதையடுத்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாக அறிவித்து தீர்மானம் இயற்றியது.
அன்று முதல் வருடந்தோறும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் சர்வதேச யோகா தினத்தன்று யோகாசனங்களைச் செய்தும், யோகா குறித்து மக்களிடம் பேசியும் வருகிறார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தில் சில யோகாசனங்களைச் செய்தார்.
யோகா செய்வதன் மூலம், கற்றல் திறன், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தென்காசியில் கரோனா விழிப்புணர்வு யோகா பயிற்சி