ETV Bharat / city

பிறந்தாச்சு மாசி: புஞ்சை புளியம்பட்டியில் மாடு விற்பனை அமோகம்... வியாபாரம் ஒரு கோடிப்பு!

ஈரோடு: தை மாதம் முடிந்து மாசி பிறந்ததையடுத்து புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் நேற்று (பிப். 18) 600-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

cow
cow
author img

By

Published : Feb 19, 2021, 8:51 AM IST

தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை, கன்றுக்குட்டிகள் என 600-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

  • நாட்டு மாடு - 50 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரையிலும்,
  • ஜெர்சி மாடு - 22 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய் வரையிலும்,
  • சிந்து, கலப்பின வகை - 20 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைபோயின.

சந்தை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தை மாதம் மாடுகள் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மாசி தொடங்கியுள்ளதால் மாடுகள் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாடுகள்
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை

இதையும் படிங்க: நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும்: நீதிமன்றம் கேள்வி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.