தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்கள் செலுத்திவந்தனர். இந்தச் சூழலில் ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்பட்டுவந்த பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கல்லூரி திறப்பு முதல் நாளான இன்று (டிச. 07) வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வசூல் செய்யக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிக்காக காத்திருக்கும் வன்கொடுமைக்குள்ளான சிறுமி: சுதந்திரமாக நாடமாடும் குற்றவாளிகள்