சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் தொட்டபுரம் காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நஞ்சையா. இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகள், ஒரு கன்றுக்குட்டி என 5 கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
மாலை வழக்கம் போல் தனது தோட்டத்தில் கால்நடைகளைக் கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் காலைத் தோட்டத்திற்கு சென்றபோது, பசு மாட்டின் கன்றுக்குட்டியின் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு நஞ்சையா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கால்தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தபோது, புலியின் கால் தடம் இருந்தது தெரிய வந்தது.
வனத்தை விட்டு வெளியேறிய புலி விவசாயத் தோட்டத்திற்குள் நுழைந்து, கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சம்பவம் தொட்டபுரம் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - கொளத்தூர் அருகே சோகம்!