ETV Bharat / city

மல்லியம் துர்கம் கிராமத்துக்கு முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடை தொடக்கம் - Mobile ration shop For the first time To the village near erode

மல்லியம் துர்கம் கிராமத்துக்கு முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடை தொடங்கப்பட்டுள்ளது.

நடமாடும் ரேஷன் கடை
author img

By

Published : Jun 19, 2022, 10:26 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மல்லியம் துர்கம் மலைக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து 1,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பாதையில் செங்குத்தான உயரமுள்ள இக்கிராமத்தில் 300 பேர் வசித்து வருகின்றனர். பழங்குடியின பொருளாதாரத்தில் பின்தங்கிய இப்பகுதி மக்கள், ரேஷன் பொருள்கள் வாங்க 15 கி.மீ தூரமுள்ள கடம்பூர் மலைப்பகுதிக்கு வரவேண்டும்.

இது குறித்து மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். இதையடுத்து நடமாடும் ரேஷன் கடை அமைக்க அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மக்கள் நலன் கருத்தி இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் நடமாடும் கூட்டுறவு அங்காடி அமைப்பதற்கு அதன் தலைவர் ஐஆர் பசுவராஜ் ஏற்பாடு செய்தார்.

இதன்படி தனி வாகனம் மூலம் ரேஷன் பொருட்களுடன் முதன்முறையாக நடமாடும் கூட்டுறவு அங்காடியை ஐஆர் பசுவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாரத்தில் இருமுறை ரேஷன் பொருட்களை இந்த வாகனம் கொண்டு செல்லும் என கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இப்பகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை: மருத்துவர், செவிலிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.