ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான பச்சோந்திகள் வசிக்கின்றன. பச்சோந்திகள் அவ்வப்போது தன்னுடைய உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவை.
தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நல்ல மழைபெய்து மரம், செடி, கொடிகள் பச்சைப் பசேலென காட்சி அளிக்கின்றன.
இந்நிலையில் நேற்று (ஜூலை 27) தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி அருகே வனப்பகுதியிலுள்ள தார்ச் சாலையின் நடுவே ஒரு பச்சோந்தி மெதுவாக ஊர்ந்து சென்றது.
அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் அதைக் கண்டதும் உடனே காரை நிறுத்தி, சாலையை கடந்து செல்லும்வரை காத்திருந்து வழிவிட்டனர்.
பகல் நேரங்களில் தார்ச் சாலையை கடந்து செல்லும் பச்சோந்திகளை கண்டால் வாகனங்களை நிறுத்திவிட்டு, அவை கடந்து சென்றபின்னர் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வு - மூன்று கால் சுடுமண் குடுவைகள் கண்டெடுப்பு'