கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது குமரன் குன்று பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஆந்திராவில் கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் மீட்பு