கோயம்புத்தூர் : உக்கடம் பகுதி கரும்புக்கடை, ஜிஎம் நகர், புல்லுக்காடு, போன்ற பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், தற்போது அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தகவலறிந்து நேற்று(ஜூலை 23)நேரில் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அவர்களிடம் அப்பகுதி மக்கள் வெறி நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 84வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜாவும் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல்