கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிநீர் விநியோகம் குறித்தும், ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் விஸ்தரிப்பு பணிகள், திட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், பாதாள சாக்கடை, மழைநீர் சேகரிப்பு பணிகள் சம்பந்தமான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது, தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் சேகரிப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்பு ஏற்படுத்த வேண்டும், பாதாள சாக்கடை பணி விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு ஆலேசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி வட்டாச்சியர் தணிகைவேல், கிணத்துக்கடவு வட்டாட்சியர் ஸ்ரீதேவி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எ.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.