ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது - Attempt murder case

கோயம்புத்தூரில் திருமணத்தை மீறிய உறவை கை விடாத கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கணவரை கொள்ள முயன்ற மனைவி கைது
கணவரை கொள்ள முயன்ற மனைவி கைது
author img

By

Published : Sep 17, 2021, 11:27 AM IST

Updated : Sep 17, 2021, 11:07 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் அருகேவுள்ள அரசூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி திலகவதி. சுப்பிரமணி வட்டிக்கு பனம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு சுப்பிரமணி, தென்னம்பாளையம் அன்னூர் சாலையிலுள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் திடீரென சுப்பிரமணியைத் தாக்கி கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். முதலில் பணம் வட்டிக்கு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டு யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அம்பலமான உன்மை

ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், பின்னர் சுப்பிரமணியின் மனைவி திலகவதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திலகவதி முன்னுக்கு பின் முரணாகவே பேசிக்கொண்டிருந்தார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், துருவி துருவி கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் அவர், கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுப்பிரமணி விருதுநகரைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனை திலகவதி பலமுறை கண்டித்தும் அவர் கைவிட மறுத்துள்ளார். மேலும், வட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் பெண்ணிற்கு கொடுத்து வந்துள்ளார்.

குற்றவாளிகள் நான்கு பேருக்கு சிறை

இதனை தட்டி கேட்டபோது திலகவதியை சுப்பிரமணி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலகவதி தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டு தனக்கு அறிமுகமான வேலாயுதமூர்த்தியை நாடியுள்ளார். கொலை செய்ய 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய வேலாயுதமூர்த்தி சிவகங்கையைச் சேர்ந்த கூலிப்படையினர் கமல்குமார், பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்து சுப்பிரமணியெக் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர், வேலாயுதமூர்த்தி, குமார், பிரபாகன், திலகவதி ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நான்கு பேரையும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மனைவி மீது அம்மிக்கல் போட்டு கொலை செய்த கணவர் கைது

Last Updated : Sep 17, 2021, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.