கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து மார்ச் 23ஆம் தேதி பட்டிமன்றப் புகழ் லியோனி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒருகாலத்தில் எட்டுப் போல இருந்த பெண்களின் இடுப்பு, தற்போது பேரல் போல மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை, கோபாலபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷினி பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.