கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 17 கவுன்சிலர்களில் ஐந்து பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினைச் சார்ந்த கவுன்சிலர்கள் ஆவர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 13) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்றும், தாங்கள் கேட்கும் நிதியினை ஒதுக்குவதில்லை என்றும் கூறி திமுக கவுன்சிலர்கள் கார்த்திக், ரம்யாகுமாரி, கருணாகரன், வளர்மதி கார்த்திகேயன், கொங்கு நாடு மக்கள் கட்சியின் ராதாமணி கனகராஜ் ஆகியோர் திடீரென வெளி நடப்பு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ’இதற்கு முன் நடந்த மூன்று கூட்டங்களில் தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர் வசதி, சாலை வசதி கேட்டு நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூறியும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை' எனத் தெரிவித்தனர்.