கோயம்புத்தூர்: ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஐ.ஜி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் இன்று (பிப்.24) பொறுப்பேற்று கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளதால் ஓரளவு இந்த மாவட்டத்தை பற்றி தெரியும். 4 பாய்ண்ட் அஜண்டாவை நிறைவேற்றவே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளேன்.
பொதுமக்களின் மனுக்கள் புகார்கள் மீது காவல்துறையினரால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் எது நடந்தாலும் அவை தடுக்கப்படும். அவற்றில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், வருகின்ற தேர்தலில் மேற்கு மண்டலங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்