ETV Bharat / city

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை: கே. பாலகிருஷ்ணன் - மக்களவைத் தேர்தல்

கோவை: தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

krishnan
author img

By

Published : Mar 26, 2019, 12:03 PM IST

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக - பாஜக வேட்பாளர்கள் தேர்தல் வரம்புகளை மீறி வருகின்றனர். இதனை கண்டிக்கும் நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகள் மறுக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சின்னங்களை ஒதுக்குவதில்கூட தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை.

அதிமுக நிர்வாகிகள் சூரிய வெப்பத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அமைச்சருக்கு அழகில்லை. தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வு இல்லை என்று கூறுவது பொருத்தமற்றது” என்றார்.

Balakrishnan

Intro: தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் k. பாலகிருஷ்ணன் பேட்டி

Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் அதிமுக பாஜக வேட்பாளர்கள் தேர்தல் வரம்புகளை மீறி வருவதாகவும் இதனை கண்டிக்கும் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் அதிகாரிகள் மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர் மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சின்னங்களை ஒதுக்குவதில் கூட பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தார்
வாகனங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றி வருகிறார்கள் முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் கூட இதே நிலை இருப்பதாகவும் ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை நாங்கள் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தார் வழக்குத் தொடுக்கும் வீரர்கள் ஏன் இந்த பாகுபாடு காட்டுகிறார்கள் என தெரியவில்லை தேர்தல் ஆணையம் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த அவர் அதிமுக நிர்வாகிகள் சூரிய வெப்பத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அமைச்சருக்கு அளவில் இல்லை நக்கல் நையாண்டி ஆக பேசி வருகிறார் அமைச்சரின் இந்த பேச்சு கண்டனத்துக்குரியது மேலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ள நிலையில் தள்ளுபடி செய்ய முடியாது என ஆளும் தரப்பு தெரிவிக்கின்றது தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி பேசுவதில் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வு இல்லை என்று கூறுவது பொருத்தமற்றது பெட்ரோல் சிலிண்டர் அனைத்தும் இரண்டு மடங்கு கடந்த 5 ஆண்டுகளில் விலை உயர்ந்துள்ளது 420 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர் இதைத்தான் பிரதமர் மோடி செய்துள்ளார் என விமர்சனம் செய்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.