ETV Bharat / city

'நேற்று ஆட்டோ சவாரி... இன்று சிக்கன் பிரியாணி... இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி?

author img

By

Published : Mar 17, 2021, 6:13 PM IST

நேற்று ஆட்டோவில் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்ட கோவை தெற்குத்தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று பொதுமக்களுடன் இணைந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

'நேற்று ஆட்டோ சவாரி.. இன்று சிக்கன் பிரியாணி.. இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி

கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். மார்ச் 15ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர் தற்போது பரப்புரை பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, ராமநாதபுரம் வரை ஆட்டோவில் பயணம்செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இன்றோ, கோவை - கிராஸ் கட் வீதியில், சாலையோர பெண் வியாபாரிகளுடன் இணைந்து மதிய உணவு அருந்தினார். சிக்கன்பிரியாணி, முட்டை என ஒரு பிடி பிடித்து விட்டு மீண்டும் தனது பரப்புரையைத் தொடங்கினார்.

இதற்கிடையில் அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அவரை டேக் செய்து நையாண்டித்தனத்துடன் 'வலிமை' அப்டேட் கேட்க, அவரும் "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக, 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என்று உரிமையுடன் ட்வீட் செய்தார்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வானதி சீனிவாசன்

இவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் இவருக்கு சளைத்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரும் தீவிரமாகப் பல்வேறு கோணங்களில் பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.