கோயம்புத்தூர்: கரோனா தளர்வுகளுக்கு பிறகு கோவை நகரில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த இரண்டு நாள்களாக வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஜவுளி நிறுவனமான கணபதி சில்க்ஸில் நேற்று (அக்.18) தகுந்த இடைவெளி இன்றி வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.
இதையடுத்து, கரோனா காலத்தில் அரசு அறிவுறுத்தலை மீறி செயல்பட்டதால், சம்மந்தப்பட்ட கடைக்கு பெரிய கடைவீதி காவல்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா விதிமுறைகளை அனைத்து ஜவுளிக்கடை, நகைக்கடைகள், மளிகை கடைகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மிகவும் எச்சரிக்கையுடன் பொதுமக்களும் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை - குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகை பேட்டி