ETV Bharat / city

கோயம்புத்தூரில் சிறைக்கதி தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Feb 3, 2022, 5:05 PM IST

கோயம்புத்தூர் சிறையில்  திருப்பூரை சேர்ந்த கொலை வழக்கு கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Coimbatore Central Prison inmate commits suicide

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த சக்திவேல் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று(பிப்.3) தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பி என்பவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நிலையில், கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டார். அதோபோல 2020ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கு விசாரணை கைதி தியாகராஜன்(26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறையில் தற்கொலை செய்துகொண்ட விசாரணை கைதி - திருப்பத்தூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.