கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை அருகே இனிப்புகள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார் முத்து என்ற பெண்மணி. இவர் கடந்த 30ஆம் தேதி இரவு கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தபோது தொப்பி, கண்ணாடி ஆகியவை அணிந்து கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் இனிப்பு வகைகள் குறித்து விசாரித்தார். பின்னர் கடையின் வெளியே சென்று மீண்டும் உள்ளே நுழைந்த அந்த இளைஞர், திடீரென முத்து அணிந்திருந்த 6.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆலந்துறை காவல் நிலையத்தில் முத்து அளித்த புகாரின் பேரில், தற்போது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையன், கடையின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்க: