கோவை: பொள்ளாச்சி நகர்ப்புறப்பகுதியில் உள்ள குமரன் நகர்ப் பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொன்ராஜ் (பாஜகவைச்சேர்ந்த அமைப்புசாரா அணியின் மாவட்டச் செயலாளர்), சிவா (முன்னாள் நகர பாஜக பொறுப்பாளர்), சரவணக்குமார் (இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர்) ஆகிய வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று(செப்.23) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் என்பவரின் கார், சிவாவின் கார், சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோக்கள் மற்றும் கார் மீது கோடாரியால் கண்ணாடியை உடைத்தும்; டீசல் ஊற்றியும் அடையாளம் தெரியாத நபர்கள் எரிக்க முயற்சி செய்து உள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்தும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இடம் காலி செய்வது தொடர்பான விவகாரம்.. தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டியதாக திமுக எம்எல்ஏ மீது வழக்கு