ETV Bharat / city

பணப்பிரச்னை; நண்பரின் கடைக்கு தீ வைத்த நண்பருக்கு வலைவீச்சு!

கோயம்புத்தூர்: புதூர் அறிவொளி நகர் பகுதியில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் நண்பரின் கடைக்கு தீ வைத்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

A friend who set fire to a friend's shop

author img

By

Published : Sep 11, 2020, 7:38 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் புதூர் அறிவொளி நகர் பகுதியில் ஆர்.கிட்ஸ் ராகிண்டோ அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அலிநவாஸ்(41).

இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது நண்பர் லிபு அலிநவாஸிடமிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பணத்தை திருப்பி கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி லிபு தனது நண்பர் ஹிஜாஸ் உடன் கடைக்கு சென்று கடைக்கு தீ வைத்ததுடன் அலிநவாஸிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து அலிநவாஸ் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பரின் கடைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.