சென்னையில் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களான, காவலர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பயன்படும் பொருட்டு 1,750 முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வழங்க தனியார் நிறுவனமான ஜீ என்டெர்டெயின்மென்ட் முன்வந்தது.
அதனடிப்படையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜீ நிறுவனத்தின் வணிகப்பிரிவுத் தலைவர் சிஜூ பிரபாகரன், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் அவற்றை வழங்கினார்.
இதேபோன்று ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் சார்பில், காவலர்களுக்காக 15 தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரங்களை காவல் ஆணையரிடம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் இன்றி தவிக்கும் மக்கள்