ETV Bharat / city

பேருந்தின் படியில் நின்ற இளைஞர் - தட்டிக்கேட்ட நடத்துநருக்கு அடி

ஆவடி அருகே அரசுப் பேருந்தை வழி மறித்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Oct 29, 2021, 11:29 AM IST

பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர்கள்
பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர்கள்

சென்னை: பூந்தமல்லியில் இருந்து ஆவடி வழியாக செங்குன்றம் நோக்கி தடம் எண் 62 பேருந்தில் ஓட்டுநரக பொன் ஆதித்யா கரிகாலன் (34), நடத்துநராக குபேரன் (43) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆவடி அரசு மருத்துவமனையில் உடம்பில் காயங்களுடன் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இதனைக் கண்ட ஆவடி அரசு மருத்துவமனை நிர்வாகிகள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவலளித்தனர். பின்னர், மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் இருவரிடமும் காயம் குறித்த காரணத்தை கேட்டனர்.

அப்போது, பூந்தமல்லியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆவடியில் ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி வந்துள்ளார்.

பேருந்து ஊழியர்களைத் தாக்கிய கும்பல்

அவரை நடததுநர் உள்ளே வரும்படி கூறியதற்கு அவர் வர மறுத்துள்ளார். இதனால், அந்த இளைஞருக்கும் அரசுப் பேருந்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த இளைஞர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பேருந்தை வழி மறுத்த 10க்கும் மேற்பட்ட கும்பல் பேருந்தை சுற்றிவளைத்தது. பேருந்தின் கதவு மூடப்பட்டிருந்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்து அந்த இளைஞர் உள்ளே நுழைந்தார்.

அவருடன் அவரது சக நண்பர்களுடன் உள்ளே நுழைந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

இளைஞர்களுக்கு போலீஸ் வலை

இந்தப் புகாரை பெற்ற ஆவடி காவல் துறையினர், சம்பவம் நடந்த திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயில் காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர்கள்

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் பிடிபட்டால் தான் யார் மீது தவறு எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓட்டுநர், நடத்துநர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பேருந்தில் ரகளை செய்த சேட்டை பாய்ஸ் - அடித்து விரட்டிய காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.