ETV Bharat / city

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு
author img

By

Published : Jun 26, 2022, 9:52 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் தெற்கு லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் (50). இவரது மனைவி பானு (45). இவர்களது மூன்றாவது மகன் பாபு (27). ஐ.டி.ஐ. முடித்த இவர் புது பெருங்களத்துாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த, மின்விசிறி பழுதடைந்ததால், காரில் பயன்படுத்தப்படும், சிறிய ரக மின் விசிறியை பயன்படுத்த முடிவு செய்து,அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட, உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் பாபு ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.உடனே இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அனைத்து ரயில்கள் நின்று சென்றிட நடவடிக்கை எடுக்கக்கோரி சிங்காநல்லூர் ரயில் நிலையம் முன்பு போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.