சென்னை: புதுவண்ணாரப்பேட்டை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (எ) பாக்கியராஜ் (35). இவர் ஒப்பந்ததாரர் ஜோஸ்வா பொறியாளரிடமிருந்து சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் உள்ள காளிகாம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியில் செட்டுக்கும் மேற்கூரை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளார்.
கடந்த 20 நாள்களாக தனது நண்பர்கள், உடன் பிறந்த அண்ணனுடன் புதிதாக கட்டி வரும் காளிகாம்பாள் குடோனில் மேற்கூரையில் சிமெண்ட் ஓடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல் வேலைக்கு வந்த பாக்யராஜ், குடோனில் மேற்கூரை சிமெண்ட் ஒடு அமைக்கும் வேலை செய்யும் போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரைச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயற்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்