ETV Bharat / city

பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

author img

By

Published : May 18, 2022, 6:05 PM IST

பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பு தமிழக ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எனவும் ஆளுநரை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கு இது ஒரு சவுக்கடி என சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?
பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனின் 31 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்த உச்ச நீதிமன்றம், சிறையில் அவரது நல்ல நடத்தை, மருத்துவ நிலை, சிறையில் பெற்ற கல்வித் தகுதி மற்றும் அவரது கருணை மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க. இளங்கோவன் கூறுகையில், "பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுவதை விட, தமிழகத்தின் கூட்டாட்சி தத்துவம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய தினம் நாம் கொண்டாட வேண்டும்.

மேலும் இந்த தீர்ப்பை பொருத்தவரை ஆளுநர் நெடுங்காலமாக மௌனம் சாதித்ததால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது," எனத் தெரிவித்த அவர் ஆளுநரை வைத்து பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசியல் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கு இது ஒரு 'சவுக்கடி' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த தீர்ப்பானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தை விட ஆளுநரின் அதிகாரம் குறைவுதான். எனவே ஆளுநர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏதாவது-நேர்மறை அல்லது எதிர்மறை பதில் அளித்திருந்தால் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்காது", எனத் தெரிவித்த அவர் இந்த தீர்ப்பை தொடர்ந்து நீட் மசோதா விலக்கு சட்ட முன்வடிவுக்கு ஒரு வழி பிறக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் நம்மிடம் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில அரசு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களை தெளிவுபடுத்துகிறது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஒரு கை ஓங்கியுள்ளது என்று கூறலாம்.

மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன்
மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன்

ஏனெனில் இது ஒரு அரசியல் தீர்ப்பு. மேலும் உச்ச நீதிமன்றம் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு", என கூறிய அவர் இந்தத் தீர்ப்பினை தமிழக அரசு அவசர கால கட்டங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை; குடும்பத்தோடு வருகிறேன்.. மு.க. ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.