சென்னை மாநகராட்சி மற்றும் கிழக்கு ரோட்டரி கிளப் இணைந்து "வாழ்க்கை வழிகாட்டி" நிகழ்ச்சியை நடத்தியது.
சென்னை மாநகராட்சியில் 2019-20ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல், கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் சாந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் 12ஆம் வகுப்பிற்குப் பிறகு எந்தப் பாடங்களை தேர்ந்தெடுப்பது, அதன் வாயிலாக வாழ்க்கையை எப்படி செம்மையாக அமைத்துக்கொள்வது என்ற ஆழ்ந்த சிந்தனைகள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இந்திய கல்வி அறிவுத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, பல்வேறு வாழ்க்கை வழிகாட்டி தொகுப்புகள் அடங்கிய வாழ்க்கை வழிகாட்டி கையேட்டினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.
மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளினால் மாணவர்கள் தங்களது எதிர்காலக் கல்வி கற்பது உள்ளிட்ட, தங்களது வாழ்க்கை மேம்பாட்டினை அடைய எளிதாக இருக்கும் எனவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்?