சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இன்றுமுதல் (டிசம்பர் 20) டிசம்பர் 24ஆம் தேதிவரை கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பிற்பகல், இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்.
உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாகக் காணப்படும். இன்றும், நாளையும் உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல், இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்'