ETV Bharat / city

மழை குறைந்த பிறகும் மெட்ரோ ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்குப் பருவமழை தாக்கம் படிப்படியாகக் குறைந்து மழை குறைந்தாலும், மெட்ரோ ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகம் வந்துள்ளதாக சென்னை மண்டல நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

author img

By

Published : Dec 9, 2021, 9:44 PM IST

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தபோதிலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகளவில் ஏரிகளுக்கு வந்தடைகிறது எனப் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு இரண்டாயிரத்து 144 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆயிரத்து 941 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 520 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து 275 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. சோழவரம், செங்குன்றம் ஏரிகளிலிருந்தும் மழை நீர் திறந்துவிடப்படுகிறது.

இது குறித்து சென்னை மண்டல நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளர் முரளிதரன் கூறுகையில், "ஐந்து மெட்ரோ ஏரிகள், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அதிகமாக நீர் வந்துகொண்டிருக்கிறது.

மழையின் அளவு குறைந்தாலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலுள்ள மழை நீரும், மற்ற குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளதால் அவைகளுடைய உபரி நீரும் மேற்குறிப்பிட்ட ஏரிகளை நோக்கி வருகிறது" எனத் தெரிவித்த அவர், இன்னும் ஒரு வார காலத்திற்குள் உபரி நீர் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், எட்டாயிரத்து 75 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது எனவும், இரண்டாயிரத்து 806 ஏரிகள் 75 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது எனவும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TN WEATHER: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.