மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிக்மத் அலி(58). மும்பையை சேர்ந்த தொழில் அதிபர். இவர் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்து, நிக்மத் அலியை விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
ஆனால் தொழிலதிபர் நிக்மத், கைது நடவடிக்கைக்கு பயந்து, வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் மும்பை மாநகர போலீஸ் கமிஷ்னர், தொழில் அதிபர் நிக்மத் அலியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் LOC போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று(செப்.23) காலை சார்விலிருந்து ஏர் இந்தியா ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பினார்.
அதே விமானத்தில் மகாராஷ்டிரா மாநில தொழிலதிபர் நிக்மத் அலியும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை சோதித்த குடியுரிமை ‘ அதிகாரிகள், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை வெளியில் விடாமல் நிறுத்தி, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு மும்பை மாநகர போலீஸ் கமிஷனருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். மும்பையிலிருந்து தனிப்படை காவல்துறையினர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, நிக்மத் அலியை கைது செய்து, அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்... சுங்கத்துறை அதிரடி