நடிகராக இருந்து சமூக தொண்டாற்றி, மரக்கன்றுகள் நடப்படுவதன் அவசியத்தைப் புரியவைத்து தானும் செயல்பட்டு, பிறரையும் செயல்பட வைத்த சூழலியல் செயற்பாட்டாளர் நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.
பகுத்தறிவுச் சிந்தனைகளை திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனங்களில் விதைத்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும், மக்களும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். சிலர் மரக்கன்றுகளை நட்டு அவருக்குப் பசுமை அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றி
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், "நேற்று (ஏப். 17) காலமான கலைமாமணி, பத்மஶ்ரீ விவேக்கின் புகழுக்குப் பெருமைசேர்க்கும் வகையிலும் கலை, சமூக சேவைகளை கௌரவிக்கும்விதமாகவும் காவல் துறையின் மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள் நடத்த ஆணையிட்ட தமிழ்நாடு அரசுக்கு அனைத்து நடிகர், நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்துவோம் - நடிகர் சிம்பு உருக்கம்'