கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரபலங்கள் பலர் தினமும் தங்கள் குடும்பத்தில் நிலவிவரும் காட்சிகளைப் படமாகப் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கிரிக்கெட் வீரர் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு, அவரது மனைவி ஹேர்கட் செய்துள்ள காட்சிகள் அதிவேகத்தில் பரவி வருகிறது.
அதி நவீன தொழில் நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, எடுக்கப்படும் திரைப்படத்திற்கு உள்ள ரசிகர்களை விட அவ்வப்போது வெளியாகும் இது போன்ற வீடியோக்களுக்கு லைக்குகளும் சேர்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக விழா மேடை ஒன்றில், பிரேம லதா சொல்ல சொல்ல விஜயகாந்த் பேசிய காட்சிகள் வைரலாகின. அப்போது, "குரல் கேப்டனோடது... ஸ்கிரிப்ட் பிரேமலதாவோடது" போன்ற விதமான கருத்துகளை நெட்டிசன்கள் பகிர்ந்தனர். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ அரசியல் மேடைகளில் ஆவேசமாகப் பேசும் பிரேமலதாவா இது என்ற கேள்வியை எழுப்புகிறது.
பேசிக்கொண்டே விஜயகாந்திற்கு ஹேர்கட் செய்யும் பிரேமலதா, "தற்போது கரோனா பாதிப்பால் பாதுகாப்பு நடவடிக்கையாக நானே இதை செய்கிறேன். நான் முடி கட் செய்து விடுவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் இருக்கும் போது அவருக்கு நான்தான் ஹேர்கட் செய்து விடுவேன்" என்றார். முதலில் முடி வெட்டி பின்பு கிர்தாக்களை டிரிம்மிங் மற்றும் ஷேவிங் செய்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு அவரின் தலைமுடிக்கு டை அடித்து விடுகிறார்.
கேப்டனுக்காக முடிவெட்டும்போது, ”முடிவெட்டும் கலையில் இவர் தக்க அனுபவம் வாய்ந்தவர் போலும்" என்ற எண்ணத்தை பார்ப்போரிடையே எழுப்புகிறது.

கிளைமேக்ஸில் கேப்டனின் கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டிய பிரேமலதா, "பாருங்கள் நகங்களை எவ்ளோ ஸ்மூத்தாக கட் செய்துள்ளேன்" என்று வசனம் பேச அதற்கு சைலன்டாக சிரிக்கும் விஜயகாந்தின் புன்சிரிப்பு, இவர்களின் எல்லை தாண்டிய அன்பை பிரதிபலிக்கிறது.
இவரின் இந்த சிரிப்புக்கு உள்ள ரசிகர்களை விட, சினிமா சண்டைக்கு உள்ள ரசிகர்கள் தான் அதிகம். அந்த ரசிகர்களுக்கு, தன் வசனத்தால் விருந்தளிக்கிறார், பிரேம லதா.
கால்களின் நகங்களை வெட்டிவிட்டு, அதில் க்ரீம் பூசும் போது, "இதெல்லாம் என் கணவரின் வீரத் தழும்புகள். ஒவ்வொன்றும் சினிமாவில் ஃபைட் சீனின் போது ஏற்பட்டது. ஒவ்வொரு தழும்பிற்கும் ஒரு வரலாறு உண்டு" என்று பெருமிதம் கொள்கிறார்.
-
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020
'வானத்தைப் போல' படத்திற்கு இசையமைத்த ராஜ்குமார் தான், இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்று சொல்ல வேண்டும். இந்தக் காட்சிகளுக்குப் பின்னால் அவர் இசையமைத்த 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்ற பாடல் ஒலிக்கிறது. இந்த காணொலி பாடலுக்கேற்ற காட்சி தான்.
'முந்தானை முடிச்சு, என் புருசன் எனக்கும் மட்டும் தான், என் புருசன் குழந்தை மாதிரி' என்று தமிழ் சினிமாக்களில் எத்தனை சினிமா படங்கள் வந்தாலும் இந்த ரியல் படங்களுக்கு நிகராகாது. தலைப்பிடாமலேயே வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களாகிய நீங்களே ஒரு தலைப்பிடுங்களேன்.
இதையும் படிங்க; மக்களுக்கு ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன், ஒன்லி ஆக்சன்தான் - விஜயகாந்த்