ETV Bharat / city

திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார்

author img

By

Published : Jul 6, 2021, 7:32 PM IST

Updated : Jul 6, 2021, 8:38 PM IST

திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன், பாஜக கல்யாணராமன், ராமதாஸ்,
கல்யாணராமன் மீது விசிக புகார்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு மற்றும் விசிக நிர்வாகிகள் இன்று (ஜூலை 6) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, "சிதம்பரம் மக்களவை உறுப்பினரும் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பதிவுகளை செய்து வருகிறார்.

சமூக பிரிவினையை உண்டாக்குகிறார்

சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறார். திருமாவளவனின் குடும்பத்தினர் பற்றியும் அவர் இழிவான பதிவுகளை செய்து வருகிறார். ஏற்கனவே, கல்யாணராமன் மீது கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 புகார்களை கொடுத்துள்ளோம்.

வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு

ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக பிரிவினையை உண்டாக்குதல், ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுப்படுத்துதல், தரக்குறைவான அவதூறு செய்திகளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பாஜக கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

வேண்டும் நடவடிக்கை

மேலும் பேசிய அவர், "நாகரீகமான அரசியல் ரீதியான செயல்பாடுகள் பாஜகவினரிடம் இல்லை. பாஜகவினர் காலி கும்பல் போன்று செயல்பட்டு வருகின்றனர். ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் குறித்து நடிகர் சூர்யா கருத்தை தெரிவித்தால் அவரை அச்சுறுத்தும் வகையில் பாஜக பதிலளிக்கிறது. பாஜகவில் இருக்கக்கூடிய நபர்களுக்கு ஜனநாயக அணுகுமுறை குறித்து தெரியாமல் பெண்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகின்றனர்.

பாஜகவினர் இணையதளங்களில் தொடர்ந்து தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் குறித்து மட்டுமே அவதூறு பரப்பி வருவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: காவிரி டெல்டா முதல் ஜார்க்கண்ட் காடுகள் வரை: ஸ்டேன் சுவாமியின் செயல்பாடு

Last Updated : Jul 6, 2021, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.