ETV Bharat / city

வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்! - ஐசிஎஃப்

சென்னை ஐசிஎஃப்பில், வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

vande bharat express
vande bharat express
author img

By

Published : May 20, 2022, 3:48 PM IST

சென்னை: 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, வந்தே பாரத் விரைவு - அதிவேக ரயில்கள், தற்போது டெல்லி-வாரணாசி மற்றும் டெல்லி-கத்ரா வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். 2023ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்குள் இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மே மாதம் முதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் சோதனை ஓட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. ஆகஸ்ட்-செப்டம்பர் முதல், ஐசிஎஃப் சென்னை, எம்சிஎஃப் ரேபரேலி மற்றும் ஆர்சிஎஃப் கபுர்தலா ஆகிய மூன்று உற்பத்திப் பிரிவுகளில் மாதத்திற்கு ஐந்து முதல் ஏழு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். உக்ரைனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சக்கரங்களுக்கான ஒப்பந்தங்களை மற்ற நிறுவனங்களுக்கு அனுப்புவதன் மூலம் பிரதமர் நிர்ணயித்த இலக்கை ரயில்வே பூர்த்தி செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த சக்கரங்கள் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இது அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உற்பத்தியை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) சென்றார். வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை ஆய்வு செய்த அவர், தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இதையும் படிங்க: காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் மதுரை ரயில்வே கோட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.