சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி அன்பகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது. எனவே, உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதத்தை வைத்து அரசியல் செய்வது யார் என்று உங்களுக்கேத் தெரியும். திமுக அதை செய்வதில்லை. அதேபோல், இந்தி மொழிக்கு எதிரான கட்சி அல்ல திமுக. இந்தி ஆதிக்கத்திற்கு எதிரானதுதான் திமுக “ என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், திமுகவின் தேர்தல் பணிகளை முடக்குவதற்காகவே இ-பாஸ் நடைமுறையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை: ஆசிரியர்களிடம் கண்துடைப்பு கருத்து கேட்பு - பழ. நெடுமாறன் கண்டனம்!