சென்னை: அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் இன்று (அக்.13) ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட உணவு டெலிவரி செய்யப்பட்ட பின், வாடிக்கையாளர் அதனை சாப்ப்ட்டார்.

அப்போது, சிக்கன் வேக வைக்காமல் இருந்தததாக தெரிகிறது. இது குறித்து, KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது ட்விட்டர் பக்கத்தில், நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு, SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை tag செய்து பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள ஸ்விகி மற்றும் KFC நிறுவனங்கள், தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நீதிமன்றம் அனுமதி