ETV Bharat / city

கரோனாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை!

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களுக்கு முதல்வர் தேரணிராஜன் பாராட்டு தெரிவித்தார்.

world_diabetes_day
world_diabetes_day
author img

By

Published : Nov 11, 2020, 7:05 PM IST

உலக நீரிழிவுத் தினம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோயை சமாளிக்க நீரிழிவு நோய் கல்வியும், விழிப்புணர்வும் தேவையென்று உலக நாடுகள் வலியுறத்துகின்றன. அதையொட்டி, "செவிலியர்களும் நீரிழிவு நோயும் என்ற தலைப்பில்" இந்த ஆண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

உலகளவில் 46.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 7 .7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8 முதல் 10 விழுக்காட்டினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரிழிவு உயர்நிலைத்துறை செயல்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 800 வெளி நோயாளிகளும், 20 ஆண்கள், 10 பெண்கள் படுக்கை உட்பட 30 படுக்கை வசதிகளில் உள் நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், முதலாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டமும் இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ளது.

world_diabetes_day
world_diabetes_day

தற்போது, சர்க்கரை நோய், சர்வதேச பெருந்தொற்றான கரோனாவுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் கடந்த 8 மாதங்களில் 25 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர். கரோனா உச்ச நிலையில் இருந்த போதும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு உயர்நிலைத்துறையின் புற நோயாளிகள் பிரிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தேரணிராஜன் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.