சென்னையில் தொடர்மழை காரணமாகவும், ஏரிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதாலும், சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்பட்டுச் செல்லும் சில ரயில்கள் மட்டும் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்கள் இயங்கும் நேரம்
மேலும் ரயில்கள் இயங்கும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4:20 மணிக்கு மங்களூரு செல்ல இருந்த சிறப்பு ரயில், தாமதமாக 7:30 மணிக்குப் புறப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5:40 மணிக்கு ஜெய்ப்பூருக்குச் செல்ல இருந்த சிறப்பு ரயில் தாமதமாக இரவு 8:30 மணிக்கு புறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.