ஆயுதபூஜையை முன்னிட்டு பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சில சமயங்களில் இவர்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச்செல்வதால், இவைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி செயல்பட்டால் விபத்துக்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல்துறையின் சார்பாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பான முறையில் ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடுமாறும் காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:
லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!