சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்- கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், கே. கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும்.
மாதவரம் புதிய பேருந்து நிறுத்தம்
ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகளும், ஆந்திர மாநில பேருந்துகளும் இங்கிருந்து செல்லும்.
பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையம்
காஞ்சிபுரம், ஆற்காடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும்.
தாம்பரம் பேருந்து நிலையம்
திண்டிவனம், விக்கிரவாண்டி, வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக ரயில் நிலையம் பேருந்து நிலையம் அருகிலிருந்து நெய்வேலி, வடலூர், சிதம்பரம், ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.
கே. கே. நகர் பேருந்து நிலையம்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
இதையும் படிங்க: சீரும் ஜல்லிக்கட்டு காளையை சீராட்டும் சிங்கப் பெண்!