ETV Bharat / city

தமிழ்நாட்டில் 9,100 பேர் எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு - மருத்துவக் கல்வி இடங்கள்

கிருஷ்ணகிரி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 வீதம் 600 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் தமிழ்நாட்டில் 9,100 பேர் எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புள்ளாதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன்
author img

By

Published : Oct 28, 2021, 10:47 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் கடந்த 5 மாதங்களாக மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், ஆய்வுக்குழுவினர் சிறிய, சிறிய குறைபாடுகளை தெரிவித்தனர். அச்சிறிய அளவிலான குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி இயக்குநரை மூன்று முறை டெல்லிக்கு அனுப்பி தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் இந்த மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் கடிதத்தின் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தினார். மூன்று முறை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை நானும், மருத்துவதுறையின் செயலாளர் மற்றும் அலுவலர்களோடு சென்று வலியுறுத்தியுள்ளோம்.

தொடர் முயற்சியின் காரணமாக 850 மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் வீதம், 450 இடங்களுக்கும், ராமநாதபுரம், நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 இடங்கள் வீதம் 400 இடங்களுக்கும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் துறையின் அலுவலர்களோடு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சரை சந்தித்து மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு ஒன்றிய அரசிடமிருந்து கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 850 மாணவர்கள் சேர்க்கைக்கு கிடைத்த ஒப்புதலுடன், இப்போது புதியதாக 600 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் என்கிற வகையில் 1450 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அதுவும் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டே கிடைத்திட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 3,750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என்கிற வகையில் 16 இருக்கிறது. இதில் 2,350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தன்னாட்சி கல்லூரிகள் என்கிற வகையில் 9 மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. இதில் 1550 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்போது புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளிலும் 1450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் 9,100 பேர் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு சிறப்பான வகையில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதற்கான கட்டமைப்பும் தமிழ்நாட்டில் தான் சிறப்பாக அமைந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தபிறகு 1,450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,750 மாணவர்களுக்கும் அதோடு சேர்த்து கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு 100 மாணவர்கள் சேர்க்கைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு என்ற வகையில் ரூ.950 கோடி நிதி ஒதுக்குவது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் - ரூ.694 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.