ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM - Etv Bharat Tamilnadu

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Oct 25, 2021, 3:11 PM IST

1.'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குனர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.

2. இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் பண்பாளர் ரஜினி - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3. தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

4. ரூ.15 கோடி கருவூல அலுவலகக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கருவூலக் கணக்குத் துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள், நான்கு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

5. 'பாஜக ஒரு வட்டிக்கடை; திமுக கிள்ளு கீரை அல்ல'- கீ.வீரமணி

தர்மபுரி மாவட்டம் அதியமான் அரண்மனையில் ஆர்எஸ்எஸ் என்னும் ட்ரோஜன் குதிரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

6. இந்தித்திணிப்பு முறியடிப்பு: சு வெங்கடேசன்

ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டுமே பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது குறித்து மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7. வடகிழக்கு பருவமழை; முதலமைச்சர் நாளை ஆலோசனை

வடகிழக்கு பருவமழை நாளை (அக்.26) தொடங்கயுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

8. ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்களுக்கு அருகிலேயே தேர்வு மையம்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

9. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் கேஎம்சிஹெச் புதிய மருத்துவனை திறப்பு!

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 750 படுக்கைகளுடன் கூடிய புதிய பொது மருத்துவமனையை அதன் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி திறந்துவைத்தார்.

10. சொத்துக்குவிப்பு வழக்கு - எம்.ஆர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜர்

சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.